உள்ளூர் செய்திகள்

தருமபுரி அருகே சாலை ஓரங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Published On 2023-01-06 16:00 IST   |   Update On 2023-01-06 16:00:00 IST
  • முக்கல் நாயக்கன் பட்டிக்கு பேருந்து இயக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
  • வழியில் வேடியப்பன் திட்டு, குளியனூர் திருப்பம் உள்ளிட்ட இடங்களில் பஸ் செல்வதற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் பொக்லின் மூலம் அகற்றப்பட்டன.

தருமபுரி, 

தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் இருந்து ஏ,கொள்ளஅள்ளி வழியாக முக்கல் நாயக்கன் பட்டிக்கு பேருந்து இயக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.இந்நிலையில் அந்த வழித்தடத்தில் இன்று சோதனை ஓட்டம் நடந்தது.

இதில் வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. ஆர்.டி.ஓ. தாமோதரன், தாசில்தார் ராஜராஜன், நகராட்சி ஆணையர் சித்ரா, போக்குவரத்து கழக போது மேலாளர் ஜீவரத்தினம், அதிகாரிகள் மோகன்குமார், தமிழரசன், தருமபுரி கிளை மேலாளர் செல்வராஜ், ஊராட்சி தலைவர் வேடியப்பன், ஒன்றிய கவுன்சிலர் இந்துபெருமாள்சாமி, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஜெய்சங்கர், தாமரைசெல்வி , தருமபுரி பி.டி.ஓ.க்கள் கணேசன், தனபால் உள்ளிட்டோர் அந்த பஸ்சில் பயணம் செய்தனர்.

வழியில் வேடியப்பன் திட்டு, குளியனூர் திருப்பம் உள்ளிட்ட இடங்களில் பஸ் செல்வதற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் பொக்லின் மூலம் அகற்றப்பட்டன.

இனி இந்த வழித்தடத்தில் தொடர்ந்து பேருந்து இயக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Tags:    

Similar News