உள்ளூர் செய்திகள்

பரிசலில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்களை படத்தில் காணலாம்.

சூளகிரி அருகே கட்டப்பட்ட பாலம் பாதியில் விடப்பட்டதால் ஆபத்தான நிலையில் பள்ளி மாணவர்கள் பரிசல் பயணம்

Published On 2022-08-17 15:28 IST   |   Update On 2022-08-17 15:28:00 IST
  • கடந்த ஆட்சியில் ரூ.2 கோடிக்கு மேல் பணம் ஒதுக்கீடு செய்து அரசு சார்பில் உயர் மட்ட பாலம் கட்டும் பணி நடைபெற்றது.
  • பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டது.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சியை சேர்ந்த போகிபுரம் கிராமத்தில் 100 மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு 1000 மேற்ப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் 100-க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள், பள்ளி, கல்லூரி சென்று படித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் இருந்து சின்னகாம நாயக்கன்பேட்டை, பெரியகாம நாயக்கன் பேட்டை இடையிலான சின்னார் கால்வாயில் செல்லும் தண்ணீர் வழியாக தான் கிராம மக்கள் பரிசல் முலம் பயணம் செய்து சூளகிரி செல்ல முடியும். இதனால் பள்ளி, கல்லூரி, ெதாழில்சாலைகளுக்கு செல்பவர்கள் 60, 70 ஆண்டுகளாக அவதிபட்டு வருகின்றனர்.

கடந்த ஆட்சியில் ரூ.2 கோடிக்கு மேல் பணம் ஒதுக்கீடு செய்து அரசு சார்பில் உயர் மட்ட பாலம் கட்டும் பணி நடைபெற்றது.

பின்பு தண்ணீர் வரத்து அதிகரிப்பால் பாலம் கட்டப்பட்டு பாதியில் பணியை நிறுத்தினர். இதனையடுத்து பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டது.

இதனால் இந்த கிராமத்தில் இருந்து வெளியூர் சென்று படிக்கும் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் ஆபத்தான நிலையில் பரிசலில் பயணம் செய்தும், ஒரு சிலர் கிராமத்திற்கு செல்ல காட்டு வழியை பயன்படுத்தி 5 கிலோ மீட்டர் சுற்றி சென்றும் வருகின்றனர்.

Tags:    

Similar News