உள்ளூர் செய்திகள்

அம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கொலு.

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் நவராத்திரி விழா தொடக்கம்

Published On 2022-09-26 09:14 GMT   |   Update On 2022-09-26 09:14 GMT
  • ஆடிப்பூர அம்மனுக்கு நவராத்திரி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடக்கிறது.
  • பன்னிரு திருமுறை நூல்கள் அலங்கரிக்கப்பட்டு யானை மீது வைத்து அம்பாள் திருவீதியுலா நடக்கிறது.

திருவையாறு:

தருமையாதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோயிலில் இன்று நவராத்திரி உற்சவ விழா தொடங்குகிறது.

இன்று முதல் அடுத்த மாதம் அக்டோபர் 4 ந்தேதி வரையில் நடக்கும் நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு மூலவர் பிரகாரத்தில் 2 பக்கமும் கொலுக் காட்சி வைக்கப்பட்டுள்ளது.

இக்கொலுவை பக்தர்களும் குழந்தைகளும் கண்டு களித்து வழிபடுகிறார்கள்.

மேலும் 'தினமும் மாலையில் ஆடிப்பூர அம்மனுக்கு நவராத்திரி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறதுவேத சாஸ்திரிகளின் வேதபாரா யணம், தேவி மகாத்மியம், அபிராமி அந்தாதி பாரா யணம் நடக்கிறது.

அம்மன் பிரகார உலா நடக்கிறது.

5 ஆம் நாள் 30 ந்தேதி காலையில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் ஆராதனையும் மாலையில் பன்னிரு திருமுறை நூல்கள் அலங்கரி க்கப்பட்டு யானை மீது வைத்து அம்பாரித் திருவீதி உலா வருகிறது. 2 ந்தேதி ஏகதின லட்சார்ச்சனை நடக்கிறது.

கொலு மண்டபத்தில் ஆன்மீக சான்றோரின் நவராத்திரி சொற்பொழிவுகளும் இன்னிசைக் கலை நிழ்ச்சிகளும் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை திருவையாறு ஐயாறப்பர் கோயில் நிர்வாகிகள் செய்திருக்கிறார்கள்.

Tags:    

Similar News