உள்ளூர் செய்திகள்

தேசிய நூலக வார விழா

Published On 2022-11-23 14:46 IST   |   Update On 2022-11-23 14:46:00 IST
  • போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு நடைபெற்றது.
  • அருவங்காடு நூலகத்தில் நடைபெற்றது.

குன்னூர்

55-வது தேசிய நூலக வார விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி அருவங்காடு நூலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக ஆய்வாளர் வசந்தமல்லிகா தலைமை தாங்கினார். போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ -மாணவிகளுக்கு பரிசளிப்பு மற்றும் உறுப்பினர் புரவலர் சேர்க்கை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையின் பொது மேலாளர் பங்கஜ் கோயல் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். 

Tags:    

Similar News