உள்ளூர் செய்திகள்

நவராத்திரியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் நாமகிரி தாயாா்

Published On 2022-09-27 10:16 GMT   |   Update On 2022-09-27 10:16 GMT
  • நவராத்திரி விழாவையொட்டி நாமகிரி தாயாா் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வருகிற நிகழ்ச்சி நடைபெற்றது.
  • நரசிம்மா் கோயிலில் நவராத்திரி கொலு விழா திங்கள்கிழமை சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.

நாமக்கல்:

நாமக்கல்லில், நவராத்திரி விழாவையொட்டி நாமகிரி தாயாா் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வருகிற நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆயுதபூஜையை முன்னிட்டு, நாமக்கல் நரசிம்மா் கோயிலில் நவராத்திரி கொலு விழா திங்கள்கிழமை சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. வருகிற ஞாயிற்றுக்கிழமை வரையில் சுவாமி மச்சாவதாரம், கூா்மாவதாரம், வாமனா வதாரம், ரங்கமன்னாா் திருக்கோலம், ராமாவதாரம், கிருஷ்ணாவதாரம், மோகனா வதாரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். வருகிற அக். 4-ந்தேதி ஆயுதபூஜையன்று ராஜாங்க சேவையும், அதற்கு மறுநாள் நாமக்கல் கமலாலயளக் குளக்கரையில் அரங்கநாதரும், நரசிம்மரும் அம்பு போடும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன. நவராத்திரி விழா நாள்களில் நாமகிரி தாயாா் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அதன்படி நேற்று நரசிம்மா் கோயிலில் இருந்து புறப்பட்டு ஆஞ்சநேயா் கோயில் வீதியில் தாயாா் உலா வந்தாா். ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

Tags:    

Similar News