உள்ளூர் செய்திகள்
தருமபுரி நகர பஸ் நிலையத்தில் கிடந்த ஆண் பிணம்
- ஆண் இறந்த நிலையில் கிடப்பது தெரிய வந்தது.
- பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தருமபுரி,
தருமபுரி நகர பேருந்துகள் நிற்கும் பஸ் நிலையத்தில் பென்னாகரம் பேருந்து நிற்கும் இடத்தில் ஆண் ஒருவர் மயங்கி கிடப்பதாக நகர போலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் விஜயசங்கர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன், போலீசார் ராஜேஷ்கண்ணன், குமார் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர்.
அப்போது சுமார் 50 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் இறந்த நிலையில் கிடப்பது தெரிய வந்தது. இதையடுத்து ஆம்புலன்சை வரவழைத்த போலீசார் அவர்களே அந்த ஆண் உடலை தூக்கி ஏற்றி பிரேத பரிசோதனைக்கு தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எவ்வாறு உயிரிழந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.