உள்ளூர் செய்திகள்

மகாகவி பாரதியார் நினைவு நாள்

Published On 2023-09-11 16:16 IST   |   Update On 2023-09-11 16:16:00 IST
  • கவிதையால் உரக்க கத்தியவர் தான் நம் தேசிய கவிஞன் மகாகவி சுப்ரமணிய பாரதியார்.
  • எர்ணாவூர் நாராயணன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை:

தமிழர் நலன், பெண் விடுதலை, தீண்டாமை போன்றவற்றிற்காக ஒரு நூற்றாண்டிற்கு முன்னரே தன் கவிதையால் உரக்க கத்தியவர் தான் நம் தேசிய கவிஞன் மகாகவி சுப்ரமணிய பாரதியார்.

ஒரு கவிஞனாக மட்டும் இல்லாமல் ஒரு சிறந்த எழுத்தாளராகவும், நல்ல பத்திரிக்கை ஆசிரியராகவும் இருந்தவர். "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்" என்று பெண்ணுரிமைக்காக பாடியவரும் இவர் தான், "சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;" என்று தீண்டாமை ஒழிப்பு குறித்து பாடியவரும் இவர் தான்.

இவரது நினைவு நாளான இன்று சென்னை மெரினா கடற்கரை அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு அருகே வைக்கப்பட்ட திருவுருவ படத்திற்கு சமத்துவ மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் எர்ணாவூர் நாராயணன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் தலைமை நிலைய செயலாளர் தங்க முத்து, ஆர்.கே நகர் பகுதி செயலாளர் ராஜேஷ், ராயபுரம் தொகுதி பொருளாளர் சங்கர பாண்டியன், நாடார் பேரவை நிர்வாகிகள் தாஸ், சதீஷ், பிரபு, 42 வது வட்ட செயலாளர் வேல்முருகன் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

Tags:    

Similar News