ஜெனகை மாரியம்மன் கோவிலில் தீர்த்தவாரி
- ஜெனகை மாரியம்மன் கோவிலில் தீர்த்தவாரி நடந்தது.
- சோழவந்தான் பேரூராட்சி சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
சோழவந்தான்
சோழவந்தான்ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவின் 17-வது நாளில் தீர்த்தவாரி திருவிழா நடந்தது. இதையொட்டி மாலை 4 மணியளவில் கொடி இறக்கப்பட்டு, மஞ்சள் நீராடுதல் நடந்தது. தொடர்ந்து கையில் வாளி, இடுப்பில் குடம், மற்றொரு கையில் ஊத்துபட்டை ஏந்திய அலங்காரத்தில் அம்மன் வைகை ஆற்றுக்கு சென்றனர். பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். அங்கிருந்து தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு 12 வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. வண்ண பூக்கள், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தீர்த்தவாரி மேடையில் அம்மன் ஊஞ்சல் ஆடும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. தீர்த்தவாரி மண்டகப்படி உபயதாரர் பால்பாண்டியன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அதிகாலையில் வைகை ஆற்றிலிருந்து ரிஷப வாகனத்தில் அம்மன் புறப்பட்டு கோவிலை வந்தடைந்தார். இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சோழவந்தான் பேரூராட்சி சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.