உள்ளூர் செய்திகள்

போலீசாருக்கான ஆணழகன் போட்டி: மதுரை ஆயுதப்படை வீரர் முதலிடம்

Published On 2022-12-07 12:59 IST   |   Update On 2022-12-07 12:59:00 IST
  • அகில இந்திய போலீசாருக்கான ஆணழகன் போட்டியில் மதுரை ஆயுதப்படை வீரர் முதலிடம் பிடித்தார்.
  • அவருக்கு ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை

மத்திய பிரதேச மாநிலம், பூனே நகரில் 71-வது அகில இந்திய அளவிலான போலீசாருக்கான ஆணழகன் போட்டி நடந்தது. தமிழகம் சார்பில் மதுரை ஆயுதப்படை போலீஸ்காரர் சிவா கலந்து கொண்டார்.

இவர் 60 கிலோ எடை பிரிவில் மணிப்பூர், உத்தரகாண்ட் வீரர்களை தோற்கடித்து முதலிடம் பெற்றார். ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரில் 2019-ம் ஆண்டு நடந்த போலீசாருக்கான ஆணழகன் போட்டியில் சிவா முதல் பரிசு பெற்றார். அதன் பிறகு கொரோனா காரணமாக 2 ஆண்டுகள் போட்டி நடக்கவில்லை. 2022-ம் ஆண்டுக்கான ஆணழகன் போட்டியில் மதுரை சிவா கலந்து கொண்டு மீண்டும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய ஆணழகன் போட்டியில் தமிழகம் சார்பில் வெற்றி பெற்ற மதுரை போலீஸ்காரர் சிவாவுக்கு ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News