உள்ளூர் செய்திகள்

நேர்காணலுக்காக வந்திருந்தவர்கள் நீண்ட வரிசையில் நின்றிருப்பதை படத்தில் காணலாம்.

பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்றிருந்த ஓய்வூதியர்கள்

Published On 2023-07-05 08:23 GMT   |   Update On 2023-07-05 08:23 GMT
  • கலெக்டர் அலுவலகத்தில் பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்றிருந்த ஓய்வூதியர்கள் இருக்கை வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை.
  • போதிய வசதிகள் செய்யப்படவில்லை.

மதுரை

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஓய்வூதியதாரர் களுக்கான நேர்காணல் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 60 வயதிற்கும் மேற்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

காலை 10 மணிக்கு தொடங்கிய நேர்காணல் மாலை வரை நடந்தது. இதில் பங்கேற்பதற்காக வந்திருந்தவர்களுக்கு போதிய வசதிகள் செய்யப்படவில்லை. ஒருவருக்கு நேர்காணல் நடத்த குறைந்தது 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை ஆனது. இதனால் நேர்காண லுக்கு வந்திருந்த வயதான வர்கள் அலுவலகத்தின் வெளியே நீண்ட வரிசையில் பல மணி நேரம் கால் கடுக்க காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

உடல் நலக்குறைவு, வயது முதிர்வு காரணமாக அவர்களால் நிற்க முடியவில்லை. இதனால் பலர் அங்குள்ள மரத்தடி யில் அமர்ந்திருந்ததை காண முடிந்தது. எனவே ஓய்வூதியதாரர்களின் நேர்காணலுக்கு வருவோ ருக்கு இருக்கை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News