உள்ளூர் செய்திகள்

அவனியாபுத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதையொட்டி இன்று முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் மேயர் இந்திராணி, மண்டல தலைவர் சுவிதா விமல், ஆர்.டி.ஓ. பிர்தவுஸ் ஸ்பாத்திமா, தாசில்தார் முத்துப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வாடிவாசல் அமைப்பதற்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது

Published On 2023-01-13 08:50 GMT   |   Update On 2023-01-13 08:50 GMT
  • அவனியாபுரத்தில் 15-ந்தேதி ஜல்லிக்கட்டு வாடிவாசல் அமைப்பதற்கு இன்று முகூர்த்தக்கால் நடப்பட்டது.
  • 10 அடி உயரமுள்ள 23 தென்னை மரங்கள் கொண்டு வாடிவாசல் அமைக்கும் பணி நடைபெற்றது.

மதுரை

மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வருகிற 15-ந்தேதி ஜல்லிக் கட்டு போட்டியை நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இதற்காக ஏற்பாடுகளை மேற்கொள்ள ரூ.17 லட்சத்து 61 ஆயிரத்துக்கு டெண்டர் விடப்பட்டு விழா மேடை, பார்வையாளர் மேடை, தடுப்பு வேலிகள், கால்நடை பராமரிப்பு சோதனை மையம், மாடுபிடி வீரர்கள் சோதனை மையம், மாடுகள் சேகரிக்குமிடம் ஆகியவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டி யின் முக்கிய அம்சமாக விளங்கும் வாடிவாசல் அமைக்கும் பணியில் அவனியாபுரம் கிராமத்தை சேர்ந்த ஜெயகுமார், இருளன் ஆகிய இருவரது குடும்பத்தினர் 400 வருடங்களாக வாடிவாசல் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு நடைபெறுவதைெயாட்டி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதைத்தொடர்ந்து 10 அடி உயரமுள்ள 23 தென்னை மரங்கள் கொண்டு வாடிவாசல் அமைக்கும் பணி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், மண்டலத் தலைவர் சுவிதா விமல், ஆர்.டி.ஓ. பிர்தவுஸ் பாத்திமா, தாசில்தார் முத்துப் பாண்டி, வருவாய் அலுவலர் பிருந்தா, கிராம நிர்வாக அலுவலர் மணிமேகலா, உதவி பொறியாளர் செல்வ விநாயகம், கவுன்சிலர்கள் கருப்புசாமி, முத்துலட்சுமி அய்யனார், கல்யாணராமன், கல்யாணசுந்தரம், சிவமணி, முனியசாமி, சுந்தர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், அவனியாபுரம் கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News