உள்ளூர் செய்திகள்

ரோட்டோரம் கிடந்த பச்சிளம் குழந்தை பிணம்

Published On 2022-06-16 09:12 GMT   |   Update On 2022-06-16 09:12 GMT
  • உசிலம்பட்டியில் ரோட்டோரம் பச்சிளம் குழந்தை பிணம் கிடந்தது.
  • நாய்கள் கடித்து குதறியதால் உடல் சின்னாபின்னமானது.

உசிலம்பட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி-தேனி மெயின்ரோடு பகுதியில் துணியால் மூடப்பட்ட நிலையில் மர்ம நபர்கள் ஒரு பச்சிளம் குழந்தையை போட்டு விட்டுச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் அந்தப்பகுதியில் உள்ள தெருநாய்கள் துணியில் வைக்கப்பட்டு இருந்த பச்சிளம் குழந்தையின் உடலை வெளியே இழுத்து போட்டு கடித்து குதறியுள்ளன.

இதுபற்றி இன்று காலை தெரியவந்ததும் ெபாதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் உசிலம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பச்சிளம் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அந்த குழந்தையின் உடல் சிதைந்து போய் இருந்ததால் அது ஆண் குழந்தையா? அல்லது பெண் குழந்தையா? என்பது கண்டறிய முடியவில்லை. உயிருடன் இருந்த குழந்தையை யாரும் விட்டுச் சென்றார்களா? அல்லது குறை மாதத்தில் பிறந்த குழந்தையை துணியில் சுற்றி போட்டுவிட்டுச் சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பச்சிளம் குழந்தை உடலை நாய்கள் கடித்து சின்னாபின்னமாக்கிய சம்பவம் அந்தப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Tags:    

Similar News