உள்ளூர் செய்திகள்

ரெயில்வே தண்டவாளத்தை கடக்க நடைமேம்பாலம் அமைக்க வேண்டும்-மாணிக்கம் தாகூர் எம்.பி. கோரிக்கை

Published On 2023-06-22 14:26 IST   |   Update On 2023-06-22 14:26:00 IST
  • ரெயில்வே தண்டவாளத்தை கடக்க நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
  • நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

திருப்பரங்குன்றம்

விருதுநகர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்ப தாவது:-

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு திருப்பரங் குன்றத்தில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். நகரின் இரு பகுதிகளிலும் ரெயில்வே தண்டவாளங்கள் அமைந்திருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதன் அடிப்படையில் இரு பகுதிகளிலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதில் திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரி அருகே அமைக்க ப்பட்ட மேம்பாலத்தின் அருகே பொதுமக்கள் ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும் வகையில் சுரங்கப்பாதை சேர்த்து அமைக்கப்பட்டது.

அதே சமயத்தில் திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே உள்ள மேம்பாலம் அருகே சுரங்கப்பாதை அமைக்கப்ப டவில்லை. இதனால் பொதுமக்கள், வாகனங்களில் செல்வோர் மேம்பாலத்திலும், நடந்து செல்பவர்கள் தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்தும் சென்று வந்தனர். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பள்ளிகள் பெரும்பா லானவை திருநகரில் இருப்பதால் திருப்பரங் குன்றம், நிலையூர், கைத்தறி நகர் பகுதி பள்ளி மாணவ, மாணவிகள் தண்டவா ளத்தை கடந்தே சென்று வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெயில்வே தண்டவாளத்தில் இரு பகுதிகளிலும் ரெயில்வே நிர்வாகம் தடுப்பு வேலி அமைத்தது. இதனால் நடந்து செல்ப வர்கள் மேம்பாலத்தில் ஏறி செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இது முதியவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு மிகவும் சிரமமான சூழ்நிலை ஏற்படுத்தி வருகிறது. எனவே இப்பகுதியில் சுரங்கப்பாதை அல்லது ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும் வகையில் ரெயில்வே நடை மேம்பாலம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Tags:    

Similar News