உள்ளூர் செய்திகள்

ஜே.பி.நட்டாவிடம் உணவு பொருள் வியாபாரிகள் சங்கம் மனு

Published On 2022-09-25 09:45 GMT   |   Update On 2022-09-25 09:45 GMT
  • ஜே.பி.நட்டாவிடம் உணவு பொருள் வியாபாரிகள் சங்கம் சார்பில் மனு கொடுத்தனர்.
  • 4 வழிச்சாலைக்கு எந்த இடையூறும் இல்லாமல் புதுடெல்லி, மைசூரில் இருப்பதுபோல “அண்டர் பாஸ் ரன்வே” அமைத்து விமான நிலைய விரிவாக்க பணியை நிறைவேற்ற வேண்டும்.

மதுரை

கடந்த 22-ந்தேதி மதுரை பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிடம் தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயப்பிரகாசம், செயலாளர் வேல்சங்கர் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை மனு கொடுத்த னர். அதில் கூறியிருப்பதா வது:-

மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் பல உணவு பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளதால் வரி ஏய்ப்போர் கைகளுக்கு பல தொழில்கள் சென்று கொண்டிருக்கிறது. இதனால் பாரம்பரியமாக ெதாழில் செய்து கொண்டிருந்த பலர் தங்களது ெதாழிலை இழந்து அதை தொடர முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதை தவிர்க்கும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி அமலாவதற்கு முன்பிருந்து, இந்த வரி வரவேண்டும். இதுகுறித்து அதிகாரிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

உணவு பொருட்களை பேக் செய்வதற்கு பிளாஸ்டிக்கை தவிர வேறு எந்த மாற்றுப்பொருளும் சந்தையில் இல்லை. பிளாஸ்டிக்கை தவிர வேறு எந்த பொருளிலும் உணவு பொருட்களை பேக் செய்தால் வெகுவிரைவில் கெட்டுவிடும்.

எனவே பிளாஸ்டிக்குக்கு மாற்றுப்பொருள் தாராளமாக சந்தையில் கிடைக்கும் வரை பிளாஸ்டிக் பயன்பாட்டின் மீதுள்ள தடைகளை நீக்க வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு அருகில் 4 வழிச்சாலை உள்ளது.

இதனால் விமான ஓடு பாதையை நீட்டிக்க காலதாமதமாகிறது. 4 வழிச்சாலைக்கு எந்த இடையூறும் இல்லாமல் புதுடெல்லி, மைசூரில் இருப்பதுபோல "அண்டர் பாஸ் ரன்வே" அமைத்து விமான நிலைய விரிவாக்க பணியை நிறைவேற்ற வேண்டும். இவை உள்பட மேலும் பல கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News