உள்ளூர் செய்திகள்

 முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி செல்லம்பட்டி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஒன்றிய செயலாளர் முத்துராமன் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.

செல்லம்பட்டியில் கருணாநிதி பிறந்த நாள் விழா

Published On 2023-06-05 07:30 GMT   |   Update On 2023-06-05 07:30 GMT
  • செல்லம்பட்டியில் கருணாநிதி பிறந்த நாள் விழா நடந்தது.
  • பொருளாளர் ஒச்சு மற்றும் வினோத், முல்லை மூவேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி தெற்கு ஒன்றியத்தில் தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது.

கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் அறிவுறுத்த லின்படி செல்லம்பட்டி தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் சமத்துவபுரம், புள்ளநேரி, கண்ணனூர், கருமாத்தூர், கோவி லாங்குளம், செல்லம்பட்டி, முண்டு வேலம்பட்டி, வாலாந்தூர், குப்பணம் பட்டி, ஈச்சம்பட்டி, தும்மக் குண்டு பகுதிகளில் கட்சி கொடியை ஏற்றி வைத்து ஒன்றிய செயலாளர் முத்து ராமன் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இதில் அவைத்தலைவர் அம்மாவாசி, ஒன்றிய துணைச்செயலாளர்கள் காசி, ராமேஸ்வரி, ராஜீ, மாவட்ட பிரதிநிதிகள் செல்லப்பாண்டி, நீதி, பவுன்சாமி, ஒன்றிய பொருளாளர் ஒச்சு மற்றும் வினோத், முல்லை மூவேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News