உள்ளூர் செய்திகள்

திருமங்கலத்தில் தாசில்தாரிடம் நகராட்சி தலைவர், அனைத்து கவுன்சிலர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

ஆகாய தாமரைகளை அகற்றி குண்டாறை சுத்தம் செய்யவேண்டும்

Published On 2022-11-09 07:27 GMT   |   Update On 2022-11-09 07:27 GMT
  • ஆகாய தாமரைகளை அகற்றி குண்டாற்றை சுத்தம் செய்யவேண்டும் என நகராட்சி தலைவர்-கவுன்சிலர்கள் தாசில்தாரிடம் கோரிக்கை விடுத்தனர்.
  • ரேசன் கடைகளில் முதியவர்களால் கைரேகை பதிவு செய்யமுடியாதநிலை இருப்பதால் அவர்களால் பொருள்களை ரேசன் கடையில் பெற இயலவில்லை.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் வார்டுகுழு பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல வார்டுகளில் பொதுமக்கள் ரேஷனில் பொருள்கள் சரிவர வழங்குவதில்லை, திருமங்கலம் நகரில் ஓடும் குண்டாற்றில் ஆகாய தாமரை செடிகள் வளர்ந்து அடைப்பை ஏற்படுத்தி யுள்ளது என தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து நேற்று திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக் குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான் மற்றும் தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. கவுன்சிலர்கள் ஆகியோர் தாசில்தார் சிவராமனை நேரில் சந்தித்து மனு கொடுத்தார்.

அப்போது அவர்கள் கூறு கையில், திருமங்கலத்தில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்தில் பொதுமக்கள் பலரும் தங்களது பகுதியில் ரேசன் பொருள்கள் சரிவரை விநியோகிப்பதில்லை, பலருக்கும் முதியோர் ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது என புகார் செய்தனர்.

மேலும் ரேசன் கடைகளில் முதியவர்களால் கைரேகை பதிவு செய்யமுடியாதநிலை இருப்பதால் அவர்களால் பொருள்களை ரேசன் கடையில் பெற இயல வில்லை. மழைகாலம் துவங்கியுள்ள நிலையில் திருமங்கலம் நகரில் ஓடும் குண்டாற்றில் வளர்ந்துள்ள ஆகாயதாமரை செடிகளை அகற்றவேண்டும், ஷட்டரை திறந்துவிட்டு அடைப்பு களை நீக்கி நீர்வரத்து கால்வாய் மூல மாக தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த னர்.

நகராட்சி கவுன்சிலர்கள், தலைவர்களின் கோரிக்கை யின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் உறுதியளித்தார்.

Tags:    

Similar News