உள்ளூர் செய்திகள்

130 கலைக்கல்லூரிகளை ஆய்வு செய்ய உத்தரவு- சென்னை பல்கலைக்கழகம் நடவடிக்கை

Published On 2022-07-20 09:03 GMT   |   Update On 2022-07-20 09:03 GMT
  • 5 ஆண்டுகளாக கல்லூரிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படாத நிலையில் இப்போது ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
  • ஆகஸ்டு முதல் வாரத்துக்குள் அனைத்து கலைக்கல்லூரிகளையும் ஆய்வு செய்து அறிக்கை வழங்க வேண்டும்.

சென்னை:

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கலை அறிவியல் கல்லூரிகளிலும் போதுமான கட்டமைப்பு வசதிகள் உள்ளதா? பேராசிரியர்கள் எண்ணிக்கை சரியாக உள்ளதா என்பதை கண்டறிந்து அந்தந்த பல்கலைக்கழகங்கள் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்குவது வழக்கம்.

அந்த வகையில் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் 130 கலை அறிவியல் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள், பேராசிரியர்கள் எண்ணிக்கை சரியாக உள்ளதா? என்று ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

5 ஆண்டுகளாக கல்லூரிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படாத நிலையில் இப்போது ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் ஆகஸ்டு முதல் வாரத்துக்குள் அனைத்து கலைக்கல்லூரிகளையும் ஆய்வு செய்து அறிக்கை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

ஆய்வுக்குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News