விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழாவில் பள்ளியின் தாளாளர் முனைவர் ராசேந்திரன் மற்றும் பள்ளியின் முதல்வர் சூரியமூர்த்தி உள்பட பலர் உள்ளனர்.
மாவட்ட அளவிலான கபடி போட்டியில் மத்தூர் கலைமகள் கலாலயா பள்ளி மாணவிகள் சாதனை
- சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான கபடி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
- 9 மாணவி கள் மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற தற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு ஆணையத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மத்தூர் கலைமகள் கலாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளா கத்தில் சென்ற 17 மற்றும் 18-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது.
இதில் மாணவிகளுக்கான கபடி போட்டியில் சூப்பர் சீனியர் எனப்படும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் மத்தூர் கலைமகள் கலாலயா பள்ளி மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றனர். இதையடுத்து அடுத்த மாதம் சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான கபடி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
மாநில அளவிலான கபடி போட்டிக்கு வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளியின் தாளாளர் ராஜேந்திரன், பள்ளி முதல்வர் சூரிய மூர்த்தி, கிருஷ்ணகிரி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் துரை, கலைமகள் களாலயா பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மோகன் உள்ளிட்டோர் பாராட்டி சான்றிதழ்களை வழங்கி னார்கள்.
கலைமகள் பள்ளியின் சூப்பர் சீனியர் கபடி குழுவின் கேப்டன் ரஞ்சனி மற்றும் துணை கேப்டன் பவித்ரா உள்பட 9 மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.