உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு திண்டுக்கல் வருகை தர உள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது.

2-ந் தேதி சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக்குழு திண்டுக்கல் வருகை கலெக்டர் தலைமையில் ஆலோசனை

Published On 2022-10-28 13:22 IST   |   Update On 2022-10-28 13:22:00 IST
  • தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
  • அலுவலர்கள் தங்கள் துறை சார்பில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை சட்ட மன்ற மதிப்பீட்டுக் குழு வினர் ஆய்வு செய்ய தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என தெரி வித்தார்.

திண்டுக்கல்:

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர் ராஜா தலைமை யில் குழுவினர் 2ந் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்து கொடைக்கா னல் பகுதியில் வனத்துறை, நகராட்சி, தோட்டக்கலை த்துறை, சுற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட மேம்பாட்டுப்பணிகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்கின்றனர்.


அதனைத்தொடர்ந்து 3ந் தேதி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு துறைகளின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணி களை ஆய்வு மேற்கொள்கி ன்றனர். அன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர் தலைமையில் குழுவினர் அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்த உள்ளனர்.

எனவே அலுவலர்கள் தங்கள் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து விரிவாக பட்டியல் தயார் செய்து ஆய்வின்போது சட்டமன்ற மதிப்பீட்டுக்குழுவினர் கேட்கும் கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளிக்க தயார் நிலையில் இருக்க வேண்டும். மதிப்பீட்டுக் குழுவினர் 2 தினங்களில் எந்தவொரு திட்டம் குறி த்தும் ஆய்வு மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது.

எனவே அலுவலர்கள் தங்கள் துறை சார்பில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை சட்ட மன்ற மதிப்பீட்டுக் குழு வினர் ஆய்வு செய்ய தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என தெரி வித்தார்.

Tags:    

Similar News