உள்ளூர் செய்திகள்
பொன்னேரி அருகே நிலத்தகராறு: கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து பெண்கள் போராட்டம்
- சுமார் 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பொன்னேரி போலீசார் பெண்களிடம் பேசுவார்த்தை நடத்தினர்.
பொன்னேரி:
பொன்னேரி அருகே உள்ள தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் அடங்கிய உப்பரபாளையம் கிராமத்தில் நிலம் தொடர்பாக பிரச்சினை உள்ளது. இதுகுறித்து பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக விசாரணை நடந்த நிலையில் அந்த நிலத்தின் ஆவணம் முழுவதும் வேறு 2 பேருக்கு மாற்றப்பட்டதாக தெரிகிறது.
இதுபற்றி அறிந்ததும் நிலத்தின் உரிமையாளர்கள் மற்றும் அவரது உறவினர்கள் பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொன்னேரி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.