உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவும் மர்ம காய்ச்சல்

Published On 2022-12-26 15:34 IST   |   Update On 2022-12-26 15:34:00 IST
  • ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவ, மாணவி களுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.
  • மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்று மாணவ,மாணவிகளின் பெற்றோர்களும், பொதுமக்களும் வலியுறியுத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட த்தில் ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவ, மாணவி களுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.மேலும் சூழிநிலை மாற்றத்தாலும் பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

அரையாண்டு தேர்வு நடந்த நிலையில் பெரும்பாலான மாணவ, மாணவிகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தவித்து ள்ளனர்.

கிராமப்புற பகுதிகளில் இந்த பாதிப்பு அதிக அளவில் இருந்து வருகிறது. ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து பள்ளிகளில் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி பரிசோதனை நடத்தி உரிய மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்று மாணவ,மாணவிகளின் பெற்றோர்களும், பொதுமக்களும் வலியுறியுத்தி வருகின்றனர்.

இது குறித்து கல்வித்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது இந்த விவகாரம் குறித்து மாவட்ட கல்வி அதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் கலந்து ஆலோசனை நடத்தி மருத்துவ முகாம்கள் நடத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளனர்.கொரோனா தொற்றின் அடுத்த பரவல் பல்வேறு நாடுகளில் பரவி வரும் சூழலில் சாதாரண காய்ச்சல் கூட மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது.

Tags:    

Similar News