உள்ளூர் செய்திகள்

மழை இல்லாததால் காய்கறி சாகுபடி பாதிப்பு

Published On 2023-04-07 08:02 GMT   |   Update On 2023-04-07 08:02 GMT
  • மழை இல்லாததால் காய்கறி சாகுபடி பாதிப்பு அடைந்துள்ளது
  • தற்போது நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதால், பாசனத்துக்கு கிணறுகளில் போதிய தண்ணீர் இல்லை

கரூர்:

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம், அமராவதி ஆற்றங்கரையோர பகுதிகளான நஞ்சைகாளகுறிச்சி, புஞ்சைகாளகுறிச்சி, எலவனுார், ராஜபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் காய்கறி சாகுபடி நடக்கிறது. பெரும்பாலும் கிணற்று பாசனம் மூலம் விவசாயம் நடக்கும். இங்கு தக்காளி, வெண்டைக்காய், சுரக்காய், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்படுகிறது. தற்போது நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதால், பாசனத்துக்கு கிணறுகளில் போதிய தண்ணீர் இல்லை. இதனால் காய்கறிகளை விதைக்க முடியாத நிலையில் விவசாயிகள் கவலையில் தவிக்கின்றனர். ஒரு சிலர் குறைந்த பரப்பளவில் காய்கறி விவசாயம் செய்துள்ளனர். மழை பெய்தால் மட்டுமே சாகுபடி செய்ய முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


Tags:    

Similar News