உள்ளூர் செய்திகள்

கராத்தே போட்டியில் ஓசூர் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை

Published On 2023-02-08 10:29 GMT   |   Update On 2023-02-08 10:29 GMT
  • கராத்தே போட்டியில் ஓசூரை சேர்ந்த மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
  • சப்- கலெக்டர் சரண்யா, சாதனை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

ஒசூர்,

கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற தென்னிந்தியவிற்கான தேசிய அளவிலான கராத்தே போட்டியில் ஓசூரை சேர்ந்த மாணவர்கள் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் வென்று சாதனை புரிந்துள்ளனர்.

தென் இந்தியாவிற்கான 8-வது தேசிய கராத்தே போட்டி பெங்களூரில் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. 5 வயது முதல் 13 வயது வரையிலான சுமார் 1500 மாணவர்கள் இந்த போட்டியில் பங்குபெற்றனர். இதில் ஓசூரில் உள்ள ஜப்பான் சோட்டேகான் கராத்தே அகாடமி என்ற பயிற்சிப் பள்ளியை சேர்ந்த 25 மாணவர்கள் கலந்து கொண்டு ,11 தங்கம், 8 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் பெற்றும், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் சுழற்கோப்பையை வென்றும் சாதனை புரிந்தனர். .

இதனைத் தொடர்ந்து, ஓசூர் சப்- கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சப்- கலெக்டர் சரண்யா, சாதனை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், கிராண்ட் மாஸ்டர் ரவி, காரனேசன் கிளப் செயலாளர் திருப்பதிசாமி, கராத்தே சங்க மேலாளர் ஜெயராமன் மற்றும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News