உள்ளூர் செய்திகள்

சேனம்விளை சி.எஸ்.ஐ. சபை செயலர் லயன் அட்வகேட் பி. ஜாண்சன் இல்ல திருமண விழா

Published On 2023-05-26 13:33 IST   |   Update On 2023-05-26 13:33:00 IST
  • திருமணம் நாகர்கோவில் சி.எஸ்.ஐ. கஸ்பா சபை ஆலயத்தில் வைத்து நடைபெற்றது.
  • வரவேற்பு நிகழ்ச்சி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

கன்னியாகுமரி:

நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ள லயன் சங்கத்தை சேர்ந்தவரும், சேனம்விளை சி.எஸ்.ஐ. சேகர சபை செயலாளருமான பி.ஜாண்சன் மற்றும் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை ஆர்.பேன்சி ஜாண்சன் தம்பதியினரின் மகன் மருத்துவர் பெலிக்ஸ் ஜாண்சனுக்கும், நேசமணி நகரை சேர்ந்த பொறியாளர் எஸ்.ஜோஸ் டேனியல்-நெவிலா தம்பதியினரின் மகள் மருத்துவர் ஜெ.ஷேரனுக்கும் திருமணம் நடந்தது.

இவர்களது திருமணம் நாகர்கோவில் சி.எஸ்.ஐ. கஸ்பா சபை ஆலயத்தில் வைத்து நடைபெற்றது. வரவேற்பு நிகழ்ச்சி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள், இன்னாள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சேகர சபை போதகர்கள், அரிமா சங்க மாவட்ட முன்னாள், இன்னாள் ஆளுநர்கள், பல்வேறு லயன் சங்க நிர்வாகிகள், வர்த்தக சங்கங்களை சேர்ந்தவர்கள், மாநகராட்சி மேயர் மகேஷ், மாநகராட்சி கவுன்சிலர்கள், லாட்ஜ் உரிமையாளர்கள், ஆசிர்வாதம் நகர் நல சங்க உறுப்பினர்கள், சேனம்விளை சபையார் கட்டிட சங்க பொறியாளர்கள், பொறுப்பாளர்கள், உறவினர்கள் பெருவாரியாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமண ஏற்பாடுகளை ஜாண்சன், சட்ட அலுவலக பணியாளர்கள் மற்றும் அரிமா ஜெயசேகர் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News