உள்ளூர் செய்திகள்

2-வது நாளாக கடல் நீர்மட்டம் தாழ்வு

Published On 2023-09-16 06:52 GMT   |   Update On 2023-09-16 06:52 GMT
  • விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை 3 மணி நேரம் ரத்து
  • பாலம் அமைக்கும் பணி நடை பெற்று வருவதால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடை பெறவில்லை.

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி கடலில் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் அமாவா சையையொட்டி நேற்று காலையில் கன்னியா குமரியில் கடல் நீர் மட்டம் தாழ்ந்து உள் வாங்கியது. இதனால் படகு போக்கு வரத்து தாமதமாக காலை 10 மணிக்கு தொடங்கியது.

இன்றும் 2-வது நாளாக கடல் உள் வாங்கி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. இன்னொரு புறம் கடல் சீற்றமாகவும் கொந்தளிப் பாகவும் காணப்பட்டது. இதனால் 2-வது நாளாக படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்கு வரத்து தொடங்கப் பட வில்லை. இதனால் அங்கு காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.இதற்கிடையில் பகல் 11 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதைத் தொடர்ந்து 3 மணி நேரத்துக்கு பிறகு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர்.

திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் மண்டபத்துக்கும் இடையே பாலம் அமைக்கும் பணி நடை பெற்று வருவதால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடை பெறவில்லை.

Tags:    

Similar News