உள்ளூர் செய்திகள்

பாலப்பள்ளம் பேரூராட்சியில் ரேசன் கடைக்கு புதிய கட்டிடம்

Published On 2022-06-16 12:43 IST   |   Update On 2022-06-16 12:43:00 IST
  • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
  • குறுகிய இடத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது.

நாகர்கோவில்:

பாலப்பள்ளம் பேரூராட்சிக்குட்பட்ட சகாயகிரி பகுதியில் உள்ள ரேசன் கடை இடநெருக்கடியான குறுகிய இடத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது.

எனவே ரேசன் கடைக்கு என புதிதாக சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து நடுத்துறை மீனவர் கூட்டுறவு சங்கம் அருகில் ரேசன் கடை கட்டிடம் கட்டுவதற்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் இருந்து ரூ.8 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.

இதனைத் தொடர்ந்து கட்டப்பபட்ட புதிய ரேசன் கடை கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்து, அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

Tags:    

Similar News