உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் வடிவீஸ்வரம் குரு அற்புத ராகவேந்தர் ஆராதனை விழா - 12-ந்தேதி தொடங்குகிறது

Published On 2022-08-10 07:44 GMT   |   Update On 2022-08-10 07:44 GMT
  • விழாவில் முதல்நாள் காலை 6.30 மணிக்கு கலசபூஜை, சுத்தி கலசபூஜை
  • மாலை 5.30 மணிக்கு பஜனை, 6.45 மணிக்கு குரு அற்புத ராகவேந்திரா திருப்பாதம் ரத வீதியில் பவனி வருதல் ஆகியவை நடக்கிறது

நாகர்கோவில் :

நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் அமைந்துள்ள குரு அற்புத ராகவேந்திரர் ஆலயத்தில் ஆராதனை விழா வருகிற 12-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

விழாவில் முதல்நாள் காலை 6.30 மணிக்கு கலசபூஜை, சுத்தி கலசபூஜை, 8 மணிக்கு பால் குடபவனி, பால் அபிஷேகம், பஜனை, தீபாராதனை, மாலை 6 மணிக்கு பட்டிமன்றம், பிரசாதம் வழங்குதல், 13-ந்தேதி காலை 8.15 மணிக்கு அபிஷேகம், 10.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுத்தல், 11.30 மணிக்கு தீபாராதனை, தொடர்ந்து அன்னதானம், மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு, 14 ந்தேதி காலை 6 மணிக்கு கலச பூஜை, 8 மணிக்கு பஜனை, தீபாராதனை,8.30 மணிக்கு அபிஷேகம், பிரசாதம் வழங்குதல், மாலை 5.30 மணிக்கு பஜனை, 6.45 மணிக்கு குரு அற்புத ராகவேந்திரா திருப்பாதம் ரத வீதியில் பவனி வருதல் ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை குரு அற்புத ராகவேந்திரா அறக்கட்டளை நிறுவனத்தலைவர் அய்யப்பன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 

Tags:    

Similar News