உள்ளூர் செய்திகள்

ஆரல்வாய்மொழி அருகே குழந்தையை வீசி சென்ற பெண் வட மாநிலத்தை சேர்ந்தவரா?

Published On 2023-06-18 07:18 GMT   |   Update On 2023-06-18 07:18 GMT
  • சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை
  • முறை தவறி பிறந்ததால் குழந்தையை வீசி சென்றார்களா? என விசாரணை

கன்னியாகுமரி :

ஆரல்வாய்மொழி சுபாஷ் நகர் பகுதியில் உள்ள கோவிலின் முன் பகுதியில் நேற்று மதியம் ஆண் குழந்தை ஒன்று கிடந்தது.

துணியால் சுற்றப்பட்ட நிலையில் கிடந்த குழந்தையை பார்த்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்த னர். உடனடியாக குழந்தை யை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரல்வாய்மொழி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்தனர். செவிலியர்கள் ஜெயா மற்றும் நித்தியா ஆகியோர் குழந்தையின் உடல் நிலையை பரிசோதித்தனர்.

பின்னர் குழந்தையின் உடலை சுத்தப்படுத்தி உடனடியாக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பிறந்த ஓரிரு நாட்களே ஆன குழந்தையை கோவில் வாசலில் வீசி சென்றது யார் என்று தெரியவில்லை.

இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றியும் ஆய்வு நடத்தி வருகிறார்கள். முறை தவறி பிறந்ததால் குழந்தையை வீசி சென்றார்களா? வேறு ஏதாவது காரணமா? என்பது குறித் தும் விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.

மேலும் அந்த பகுதியில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தோவாளை சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான செங்கல் சூளைகள் உள்ளது. அங்கு வட மாநில பெண்களும் வேலை பார்த்து வருகிறார்கள்.

அவர்கள் யாராவது குழந்தையை வீசி சென்றார்களா? என்ற கோ ணத்தில் விசாரணை நடத் தப்பட்டு வருகிறது. பிள் ளைக்காக எத்தனையோ குடும்பங்கள் தவம் இருந்து வரும் நிலையில் பெற்ற குழந்தையை கல் மனதுடன் வீசி சென்ற தாயை போலீ சார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News