உள்ளூர் செய்திகள்

இந்து யாத்திரிகர்கள் தங்கும் விடுதி 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறப்பு

Published On 2023-09-21 07:21 GMT   |   Update On 2023-09-21 07:21 GMT
  • கோர்ட்டு உத்தரவு எதிரொலி
  • அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் சீல் வைத்து பூட்டி கையகப்படுத்தினர்.

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 36 சென்ட்பரப்பளவு உள்ள தானிய களஞ்சியம் கன்னியாகுமரி சன்னதி தெருவில் பகவதி அம்மன் கோவில் கலையரங்கம் அருகில் அமைந்துள்ளது.

இந்த இடம் தனிப்பட்ட நிறுவனத்தின் கையில் பல வருடங்களாக இருந்து வந்தது. இந்த யாத்திரிகர்கள் தங்கும் விடுதியாக செயல்பட்டு வந்த இந்த இடத்தை மீட்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பல வருடங்க ளாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது.

இதற்கிடையில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சாதகமாக கோர்ட்டு தீர்ப்பு வழங்கிய தைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி அந்த இடத்தை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர்ரத்தின வேல் பாண்டியன்தலைமையில் நாகர்கோவில் இந்து சமய அறநிலையதுறை உதவி ஆணையர் தங்கம் முன்னி லையில் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், சுசீந்திரம் கோவில் மேலாளர் ஆறுமுகதரன், ஆய்வாளர் சுஜித், மரமத்து பிரிவு பொறியாளர் ராஜ்குமார், அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் சீல் வைத்து பூட்டி கையகப்படுத்தினர்.

இந்த சொத்தின் மதிப்பு ரூ.18 கோடி ஆகும். இதனை எதிர்த்து இந்து யாத்திரிகள்தங்கும்விடுதி சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி இந்து யாத்திரிகர்கள் தங்கும் விடுதியில் சீலை திறந்து அவர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார். அதன்படி கன்னியாகுமரி சன்னதி தெருவில்சீல்வைத்து பூட்டி வைக்கப்பட்டு இருந்த இந்து யாத்திரிகர்கள் தங்கும்விடுதி 2 மாதங்களுக்கு பிறகு சீல் திறக்கப்பட்டு இந்து யாத்திரிகர்கள் தங்கும்விடுதி பொறுப்பாளர் எம்.எஸ்.மணியிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

Similar News