உள்ளூர் செய்திகள்

தலக்குளம் அருகே கன்னியாஸ்திரி விபத்தில் பலியான வழக்கில் பஸ் டிரைவர் கைது

Published On 2023-10-09 06:45 GMT   |   Update On 2023-10-09 06:45 GMT
  • மோட்டார் சைக்கிளை முந்தி சென்றபோது மினி பஸ் எதிர்பாராதவிதமாக ஜெயசெல்வி மீது மோதியது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இரணியல் :

தூத்துக்குடி மாவட்டம் செட்டிவிளை மணல் மாதா கோவில் பகுதியை சேர்ந்த வர் குருசுமிக்கேல். இவரது மகள் அருட் சகோதரியான ஜெயசெல்வி (வயது 37). இவர் குமரி மாவட்டம் திங்கள்நகர் அடுத்த பட்டரிவிளை ஏசுவின் திரு இருதய கன்னியர்மடத்தில் தங்கி பட்டரிவிளை உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலையில் பட்டரிவிளை யிலிருந்து பள்ளவிளை நோக்கி திருப்பலிக்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திங்கள்நகரில் இருந்து மினி பேருந்து ஒன்று புதுவிளை பகுதியில் வைத்து ஜெயசெல்வி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை முந்தி சென்றபோது மினி பஸ் எதிர்பாராதவிதமாக ஜெயசெல்வி மீது மோதியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்தில் துடிதுடித்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குளச்சல் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற னர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயசெல்வி ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறினர்.

பின்னர் பிரேத பரி சோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து இரணி யல் போலீஸ் நிலையத்தில் அருட்சகோதரி ஞான செல்வி புகார் அளித்தார். புகாரின் பேரில் மினி பஸ்சை ஓட்டிய பிலாக்கேடு பகுதியை சேர்ந்த பாண்டி யன் (வயது 27) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

Similar News