உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

வீட்டில் தூங்கிய குழந்தையிடம் நகை பறித்த மர்ம நபர்

Published On 2022-10-12 07:49 GMT   |   Update On 2022-10-12 07:49 GMT
  • தாயின் தாலிசங்கிலியையும் அபகரிக்க முயன்றதாக புகார்
  • தக்கலை அருகே இன்று அதிகாலை துணிகரம்

கன்னியாகுமரி:

தக்கலை அருகே உள்ள பனங்கான விளை பகுதியைச் சேர்ந்தவர் அலோசியஸ், வியாபாரி.

இவர், தனது பெற்றோர், மனைவி அனிட்டா(வயது 32) மற்றும் 1 வயது மகன் ஆகியோருடன் வசித்து வருகிறார். நேற்று இரவு இவர்கள் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டி ருந்தனர்.

அனிட்டா தனது குழந்தை யுடன் ஒரு அறையில் படுத்தி ருந்தார். அந்த அறையில் காற்றுக்காக ஜன்னல் கதவை திறந்து வைத்து உள்ளனர். இதனை அறிந்த யாரோ மர்மநபர் இன்று அதிகாலை திறந்திருந்த ஜன்னல் வழியாக கை விட்டு கதவை திறந்துள்ளார்.

பின்னர் அந்த நபர் வீட்டின் அறைக்குள் நுழைந்து குழந்தை கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளான். மேலும் அனிட்டா அணிந்திருந்த 9 பவுன் தாலிச்சங்கிலியையும் அபகரிக்க முயன்றுள்ளான்.

அந்த நேரத்தில் குழந்தை அழுததால், அனிட்டா கண் விழித்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மர்மநபர், நகையை பறித்து விட்டு தப்பி ஓட முயன்றான். ஆனால் அனிட்டா, தனது கழுத்தில் கிடந்த நகையை பிடித்துக் கொண்டு கூச்சலிட்டார்.

இதனால் அந்த மர்ம நபர், அனிட்டாவின் நகையை விட்டு விட்டு குழந்தையிடம் பறித்த ஒரு பவுன் நகையுடன் தப்பி ஒடிவிட்டான். இந்த துணிகர சம்பவம் குறித்து தக்கலை போலீசில் அனிட்டா புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி காமிரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் நகை பறித்த நபர் ஸ்கூட்டரில் ஏறிச் செல்வது தெரியவந்தது. சுமார் 30 வயது மதிக்கத்தக்க அவர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News