உள்ளூர் செய்திகள்
மார்த்தாண்டத்தில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்
- விளவங்கோடு தாலுகாவுக்கு உட்பட்ட சேதமடைந்து காணப்படும் அனைத்து சாலைகளையும் சீரமைக்கவேண்டும்
- மனித பாதுகாப்பு கழகம் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி :
மனித பாதுகாப்பு கழகம் மற்றும் உண்ணாமலைக்கடை நைட்டிங்கேல் வெல்ஃபேர் நலச் சங்கமும் இணைந்து மார்த்தாண்டம் காளை சந்தை பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு மக்கள் நற்பணி மன்றத் தலைவர் பி.கே.சிந்துகுமார் தொடக்கி வைத்தார்.ஆர்ப்பாட்டத்தின்போது விளவங்கோடு தாலுகாவுக்கு உட்பட்ட சேதமடைந்து காணப்படும் அனைத்து சாலைகளையும் சீரமைக்கவேண்டும். தாமிரபரணி ஆற்றில் கலக்கும் கழிவு நீரை தடுக்க வேண்டும்.சுத்தமான குடிநீர் மக்களுக்கு வழங்கவேண்டும்.சீர்குலைந்து காணப்படும் மார்த்தாண்டம் சந்தையை உடனடியாக சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதில் மனித பாதுகாப்பு கழகம் மற்றும் நல சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.