முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்தபோது எடுத்த படம்.
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி
- 2-வது நாளாக குவிந்த பள்ளி மாணவ-மாணவிகள்
- பொதுமக்களுக்கான போட்டிகள் வருகிற 17ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது
நாகர்கோவில்:
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்தும் முதலமைச்சர் கோப்பைக்காண விளையாட்டு போட்டிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நேற்று தொடங்கியது. இதனை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் ஆண்கள் பெண்களுக்கு தனித்தனி யாக போட்டிகள் நடத்தப்ப டுகிறது. பள்ளி மாணவ -மாணவிகளுக்கான போட்டிகள் நடந்தது.இன்று 2-வது நாளாக போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது. சிலம்பம், கால்பந்து, வாலிபால், கபடி, டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகள் நடந்தது. 12 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட பிரிவில் போட்டிகள் நடத்தப்பட்டது. இன்று நடந்த போட்டியில் பங்கேற்க மாவட்டம் முழு வதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் வந்திருந்தனர். மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜேஷ் மேற்பார்வையில் இந்த போட்டிகள் நடந்தது.
நாளை மறுநாள் 6-ந்தேதி கல்லூரி அளவிலான போட்டிகள் நடக்கிறது. மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான கல்லூரி மாணவிகள் இந்த போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். இதைத் தொடர்ந்து அரசு ஊழியர் கள்,பொதுமக்களுக்கான போட்டிகள் வருகிற 17ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.இதை தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.