உள்ளூர் செய்திகள்

சாதனை படைத்த மாணவிகளை பள்ளி ஆசிரியர்கள் பாராட்டிய காட்சி.

சரக அளவிலான விளையாட்டுப் போட்டி அரசு பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை

Published On 2022-09-22 10:04 GMT   |   Update On 2022-09-22 10:04 GMT
  • பர்கூர் சரக அளவிலான விளையாட்டு போட்டி அஞ்சூர்- ஜெகதேவி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
  • 48 அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சரக அளவிலான விளையாட்டு போட்டி அஞ்சூர்- ஜெகதேவி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

இந்த போட்டிகளில் பருகூர் சரக அளவில் உள்ள 48 அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இதில் சூலாமலை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர். 17 வயதுக்கு உட்பட்ட 3 ஆயிரம் மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஓட்ட பந்தயங்களில் ஆண்கள் பிரிவில் இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் சச்சின்குமார் என்பவர் முதலிடமும், பெண்கள் பிரிவில் பத்தாம் வகுப்பு படிக்கும் ஐஸ்வர்யா இரண்டாம் இடமும், பத்தாம் வகுப்பு படிக்கும் மதுமிதா மூன்றாம் இடமும் பிடித்து சாதனை படைத்தனர் மேலும் 14 வயதுக்குட்பட்ட 600 மீட்டர் ஓட்டப்பந்தய பெண்கள் பிரிவில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஷாலினி மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.

இந்த சாதனை படைத்து, பள்ளிக்கு பெருமை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு சூலாமலை அரசு உயர்நிலைப் பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.

விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பத்மப்ரியா தலைமை வகித்து, சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள் பரத்குமார், கனிமொழி, பப்பில்லா ஆரோக்கியமேரி, விஜயலட்சுமி, சபிதா தனலட்சுமி மற்றும் ராமன் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News