உள்ளூர் செய்திகள்

தாராபுரம் நகராட்சி கூட்டம் நகராட்சி தலைவர் பாப்புகண்ணன் தலைமையில் நடைபெற்றபோது எடுத்த படம்.

தாராபுரம் நகராட்சி கூட்டத்தில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Published On 2022-12-31 05:25 GMT   |   Update On 2022-12-31 05:25 GMT
  • கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் தலைமை தாங்கினார்.
  • ஸ்ரீதரன் உள்பட வார்டு கவுன்சிலர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தாராபுரம் :

தாராபுரம் நகராட்சி கவுன்சிலர் கூட்டம் அலுவலக மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ரவிச்சந்திரன், ஆணையர் ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடந்த கவுன்சிலர்களின் விவாதங்கள் வருமாறு:-

முபாரக் அலி (தி.மு.க):- எனது வார்டில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகளை கூட கடித்து ஆஸ்பத்திரிக்கு சென்று உள்ளனர். நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தலைவர் கு.பாப்புகண்ணன்:- தெரு நாய்களை பிடிக்க அரசுக்கு எழுதியுள்ளோம். விதிமுறைக்குட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

சீனிவாசன் (தி.மு.க):- எனது வார்டில் குளத்துபுஞ்சை தெரு அருகேயுள்ள மழைநீர்வடிகால் முற்றிலும் பழுதடைந்துள்ளது. அதை சரி செய்யவேண்டும்.

தலைவர்:-நடவடிக்கை எடுக்கப்படும்.

நாகராஜ் (அ.தி.மு.க):- எல்.இ.டி விளக்குகள் பொருத்தும்பணி எப்போதும் தொடங்கும்

தலைவர்:-எல்.இ.டி பல்புகள் வந்துவிட்டது.உடனடியாக பொருத்தும் பணி தொடங்கப்படும்.

ஸ்ரீதரன் (திமுக):- அமராவதி ரவுண்டானாவில்அமராவதி ஆற்றின் சிறப்பை வலியுறுத்தும் அமராவதி அன்னை சிலை எப்போது அமைக்கப்படும்.

தலைவர்:- தனியார் பங்களிப்பை தவிர்த்து நகராட்சி சார்பிலேயே வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாராபுரம் நகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு ரூ.2 கோடியே 73 லட்சம் நிதி மின்விளக்குகள் மற்றும் மார்க்கெட் கட்டிடம் கட்ட நிதி வழங்கிய முதல்-அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. மன்ற பொருளாக 37 தீர்மானங்கள் வைக்கப்பட்டிருந்தது. அவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர்கள் ராஜேந்திரன், ஹைடெக் அன்பழகன், எஸ்.டி.நாகராஜ், துரை சந்திரசேகர், முபாரக் அலி, உஷ்–சானா பானுஷேக்பரித், சக்திவேல், ஸ்ரீதரன் உள்பட வார்டு கவுன்சிலர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News