உள்ளூர் செய்திகள்

டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது.

தஞ்சையில், பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம் தொடக்கம்

Published On 2023-01-03 08:59 GMT   |   Update On 2023-01-03 08:59 GMT
  • ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு ஒன்று மற்றும் ஆயிரம் ரூபாய் ஆகியவை வழங்கப்பட உள்ளன.
  • 6.5 லட்சம் கார்டுகளுக்கு இன்று முதல் டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது.

தஞ்சாவூர்:

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இந்த ஆண்டு பொங்கலுக்கான பரிசு தொகுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.

அதன்படி, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு ஒன்று மற்றும் ஆயிரம் ரூபாய் ஆகியவை வழங்கப்பட உள்ளன.

இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வருகிற 9-ந் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளன.

பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்று தொடங்கிவைக்கிறார்.

அன்றைய தினமே தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்.

பொங்கல் தொகுப்பை பெறுவதற்காக இன்று முதல் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யும் பணி தொடங்கியது.

தஞ்சை மாவட்டத்தில் 1185 ரேஷன் கடைகளில் உள்ள 6.5 லட்சம் கார்டுகளுக்கு இன்று முதல் டோக்கன்விநியோகம் செய்யும் பணி தொடங்கியது.

தஞ்சை கரந்தை சுஜானா கீழக்கரை பகுதியில் 4-வது வார்டு கவுன்சிலர் சுமதி இளங்கோவன், ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு டோக்கன் வினியோகித்தனர்.

இதேப்போல் தஞ்சை மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் டோக்கன் வினியோகம் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

அந்த டோக்கனில் பொங்கல் தொகுப்பை பெறும் நாள், நேரம் போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

அதைக் காட்டி ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பை ரேஷன் அட்டைதாரர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

Tags:    

Similar News