உள்ளூர் செய்திகள்

நத்தமேட்டில் உலக கழிப்பறை தின தூய்மை நடைப்பயணம்

Published On 2022-11-19 14:49 IST   |   Update On 2022-11-19 14:49:00 IST
  • உலக கழிப்பறை தினம் குறித்து தூய்மை நடைப்பயணம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • விளம்பர தட்டிகளுடன் பள்ளி மாணவ மாணவியர்கள் ஊர்வலம் சென்றனர்.

கடத்தூர்,

தருமபுரி மாவட்டம் கடத்தூர் யூனியனுக்கு உட்பட்ட மோட்டாங்குறிச்சி கிராமபஞ்சாயத்து பகுதியில் நத்தமேடு கிராமத்தில் இன்று உலக கழிப்பறை தினம் குறித்து தூய்மை நடைப்பயணம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற கிராமமாக கிராமத்தை உருவாக்கவேண்டும். நான் எப்போதும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரிப்பேன் என்றும். தீங்கு விளைவிக்கக் கூடிய குப்பைகளைபாதுகாப்பான முறையில் கையாளுவேன் என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய விளம்பர தட்டிகளுடன் பள்ளி மாணவ மாணவியர்கள் ஊர்வலம் சென்றனர்.

ஊர்வலத்தின் முடிவில் கழிப்பறையை முறையாக பயன்படுத்துவேன்.திறந்தவெளியில் மலம் கழிக்க மாட்டேன் என்பது உள்ளிட்ட உறுதிமொழிகளை ஏற்றுக் கொண்டனர். பா.ம.க. ஒன்றியகவுன்சிலர் ஜெயகுமார் தலைமை தாங்கினார்.மக்கள் நல பணியாளர் தர்மலிங்கம், பஞ்சாயத்துதுணைதலைவி லட்சுமி, தலைமை ஆசிரியர் உண்ணாமலை,ஆசிரியர் கோவிந்தசாமி, காமராஜ், பார்த்திபன், புது வாழ்வு திட்டம் விஜயலட்சுமி, வார்டு உறுப்பினர் சுதா மற்றும் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள், சமூக ஆர்வ லர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News