உள்ளூர் செய்திகள்

நல்லம்பள்ளியில்கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை

Published On 2023-03-22 15:38 IST   |   Update On 2023-03-22 15:38:00 IST
  • லாரிகளில் கொண்டுவரப்படும் வைக்கோல் கட்டுகள் ஒரு கட்டு 230 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
  • இவ்வளவு விலை கொடுத்து கால்நடை வளர்ப்போர் வாங்கி வைத்தாலும் அவை உடனடியாக தீர்ந்து விடுகிறது.

தொப்பூர்,

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக அனல் பறந்த வெப்பம் மற்றும் அனல் காற்று வீசி வருகிறது.

தொடர் வெப்பம் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் அதிவேகமாக குறைந்துவிட்டது. நிலத்தடி நீர்மட்டம் குறைய தொடங்கியவுடன் மற்றொருபுறம் கால்நடை வளர்ப்போருக்கு மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

கால்நடை வளர்ப்போர் கால்நடை களுக்கு தேவையான தீவனப் புற்கள் வைக்கோல் உள்ளிட்டவற்றை அதிகம் பயன்படுத்தி வந்த நிலையில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததின் அதன் காரணமாக தண்ணீர் இல்லாததால் கால்நடை களுக்கு தேவையான தீவன தட்டுப்பாடு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தற்பொழுது வெளி மாவட்டங்களில் இருந்து தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி சுற்றுவட்டார பகுதியில் அதிக அளவில் லாரிகளில் வைக்கோல் கட்டுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

வைக்கோல் கட்டுகள் தேவைக்கு அதிகமாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டாலும் அதிக அளவு விலை காரணமாக அவற்றின் விலை கால்நடை வளர்போருக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

லாரிகளில் கொண்டுவரப்படும் வைக்கோல் கட்டுகள் ஒரு கட்டு 230 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வளவு விலை கொடுத்து கால்நடை வளர்ப்போர் வாங்கி வைத்தாலும் அவை உடனடியாக தீர்ந்து விடுகிறது.

கால்நடைகள் மூலம் பால் விற்பனை செய்பவர்கள் அவற்றுக்கு வைக்கோல் வாங்கி போடும் செலவுகள் பல மடங்கு அதிகரித்துள்ளதால் தற்போதைய சூழ்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

ஒருபுறம் கோடை காலத்துக்கு முன்பு துவங்கிய அதிக அளவிலான அனல் காற்றுடன் கூடிய வெப்பம் மறுபுறம் தீவனம் பற்றாக்குறை இவற்றால் நல்லம்பள்ளி சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் கால்நடை வளர்ப்போர் மிகுந்த துயரத்துக்குள்ளா கியுள்ளனர்.

Tags:    

Similar News