உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் மாவட்ட அளவிலான குழு விளையாட்டு போட்டிகள்

Published On 2022-10-28 15:06 IST   |   Update On 2022-10-28 15:06:00 IST
  • கால்பந்து, இறகுப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.
  • உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி இப்போட்டிகளை ஒருங்கிணைத்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், வருவாய் மாவட்ட அளவிலான குழு விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடந்தது. இதில், பள்ளி மாணவர்களுக்கு கால்பந்து, இறகுப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.

இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 9 சரகங்களில் வெற்றி பெற்ற அணிகள் மட்டும் பங்கேற்றன. இப்போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெறுவார்கள்.

இப்போட்டிகள், 14, 17 மற்றும் 19 வயது என மூன்று பிரிவுகளில் நடந்தது. போட்டிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார். தொழில் நுட்பத் தலைவராக உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி இப்போட்டிகளை ஒருங்கிணைத்தார்.

உடற்கல்வி ஆய்வாளர் சைமன் ஜார்ஜ் கால்பந்து, உடற்கல்வி இயக்குனர் திவ்யலட்சுமி கைப்பந்து, உடற்கல்வி இயக்குனர் சிதம்பரம், உடற்கல்வி ஆசிரியர் சிவபிரகாஷ் ஆகியோர் கூடைப்பந்து போட்டிகளுக்கு நடுவர்க ளாக செயல்பட்டனர். 108 அணிகள் இப்போட்டிகளில் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News