உள்ளூர் செய்திகள்

மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிய காட்சி

உடுமலையில் இந்து சமய பண்பாட்டு வகுப்புகள்

Published On 2022-06-28 06:13 GMT   |   Update On 2022-06-28 06:13 GMT
  • பரத நாட்டியம்,வாய்ப்பாட்டு,திருக்குறள், பக்திப்பாடல்கள், யோகா முதலிய பண்பாட்டு கலாச்சார நிகழ்வுகளை மாணவ மாணவிகள் நிகழ்த்திக் காட்டினார்கள்.
  • மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

உடுமலை :

கோடை விடுமுறை காலத்தில் சேவா பாரதி அமைப்பின் சார்பில் உடுமலையில் 11 இடங்களில் இந்து சமய பண்பாட்டு வகுப்புகள் நடைபெற்றன.இந்த வகுப்புகளில் 200 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். இதன் நிறைவு விழா நிகழ்ச்சிஉடுமலை எஸ். வி .புரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மழை உடுமலை அமைப்பின் இயற்கை ஆர்வலர் துரை ஜவகர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.முதுகலை தமிழ் ஆசிரியர் சரவணன் வரவேற்றுப் பேசினார் .மூத்த பத்திரிகையாளர் கவிஞர் குழலேந்தி சிறப்புரையாற்றினார். உடுமலை டாக்டர்கள் சுமந்த் கிருஷ்ணன், விஜயகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினர்.

இந்நிகழ்ச்சியில் பரத நாட்டியம்,வாய்ப்பாட்டு,திருக்குறள் ஒப்புவித்தல்,பக்திப்பாடல்கள்,யோகா,சிலம்பாட்டம் முதலிய பண்பாட்டு கலாச்சார நிகழ்வுகளை மாணவ மாணவிகள் நிகழ்த்திக் காட்டினார்கள். சேவாபாரதி உறுப்பினர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். இந்த அமைப்பின் செயலாளர் பார்த்தசாரதி நன்றி கூறினார். நிகழ்ச்சியின்போது கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News