நிகழ்ச்சியில் கலெக்டர் சாந்தி பேசியபோது எடுத்த படம்.
மாரண்டஅள்ளி பேரூராட்சியில் ரூ.2.03 கோடி மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகள் அடிக்கல் நாட்டு விழா
- ரூ.2.03 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்.
- 147 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி பேரூராட்சியில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள், தார்சாலை புதுப்பித்தல் பணி, சிமெண்ட்சாலை அமைக்கும் பணி, மேல்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்பு பணிகள், பேருந்து நிலைய பராமரிப்பு பணி ஆக மொத்தம் ரூ.2.03 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாவட்ட கலெக்டர் சாந்தி முன்னிலையில் அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு முதல் அமைச்சர் உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்கள். அந்த வகையில் இன்றைய தினம் மாரண்டஅள்ளி பேரூராட்சியில் கலைஞரின் நகர்புர மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மின்கலத்தில் இயங்கும் ரூ.6.6 லட்சம் மதிப்பிலான 3 குப்பை சேகரிக்கும் வாகனங்களின் பயன்பாடுகளை தொடங்கி வைத்தும், வார்டு எண் 15 மாரப்பன் தெரு புதுகாலனி, வார்டு எண் 12 சுண்ணாம்புகார தெரு, வார்டு எண் 13 சந்தை தெரு, வார்டு எண் 10 ஆணைகிணற்று தெரு, வார்டு எண் 3 பஞ்சப்பள்ளி சாலை குறுக்கு தெரு, வார்டு எண் 1 கொரவாண்டஅள்ளி குறுக்குத் தெருக்களில் தார்சாலைகள் அமைப்பதற்காக ரூ.96.50 லட்சம் மதிப்பீட்டிலும்,
மாரண்டஅள்ளி பேரூராட்சியில் நகர்புற சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ், வார்டு எண்.14 காந்திநகரில் தார்சாலை புதுப்பித்தல் பணி, வார்டு எண்.3 செவத்தியம்பட்டி மேற்கு, வார்டு எண்.3 செவத்தியம்பட்டி கிழக்கு, வார்டு எண்.7 யாதவர் தெரு, வார்டு எண்.8 தாண்டவ உடையார்தெரு, வார்டு எண்.10 முத்து உடையார் தெரு, வார்டு எண்.09 அக்ரஹாரத்தெரு, வார்டு எண்.10 ஆணங்கிணற்று தெரு, வார்டு எண்.10 பிள்ளையார் கோவில் தெரு, வார்டு எண்.12 சுண்ணாம்புக்காரத்தெரு, வார்டு எண்.07 பழைய பஸ் ஸ்டாண்ட் சிமெண்ட்சாலை ஆகிய பணிகளுக்கு ரூ.42.75 லட்சம் மதிப்பீட்டிலும்,
என மாரண்டஅள்ளி பேரூராட்சியில் மொத்தம் ரூ.2.03 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்.
இதனைத் தொடர்ந்து ஆதி திராவிடர் நலத்துறையின் மூலம் 47 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களும், வருவாய் துறையின் மூலம் 50 பயனாளிகளுக்கு முதியோர் உதவி தொகைக்கான உத்தரவு ஆணைகளும், இருளர் இனத்தைச் சேர்ந்த 28 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களும், ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 50 பயனாளிகளுக்கு ஆடு, மாடு கொட்டகை அமைத்திட உத்தரவு ஆணைகளும் என மொத்தம் 147 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.
இதில் மாவட்ட செயலாளர்கள் பழனியப்பன், தடங்கம் சுப்பிரமணி, மாவட்டத் துணைச் செயலாளர்கள் ராஜகுமாரி மணிவண்ணன், மணி, ஒன்றிய செயலாளர்கள் பி.கே அன்பழகன், முனியப்பன், முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம், வக்கீல் முருகன், சூடப்பட்டி சுப்பிரமணி, பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி கே முரளி, மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் எம் ஏ வெங்கடேசன் துணைத் தலைவர் கார்த்திகா பன்னீர்செல்வம், கவுன்சிலர்கள், சத்யா சிவகுமார், வெங்கடேசன், யதிந்தர், கார்த்திகேயன், ரீனா, கீதா, லட்சுமி, அபிராமி, மற்றும் கட்சி நிர்வாகிகள் கிளை கழக செயலாளர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.