அரூர் அருகே பட்டதாரி பெண்-சிறுமி மாயம்
- வீட்டில் இருந்த கீர்த்தனா திடீரென மாயமானார்.
- மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரூர்,
தருமபுரியை அடுத்த மொரப்பூர் அம்பாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராம்கி மகள் கீர்த்தனா(வயது 24). பி.இ. படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 24-ம் தேதி, வீட்டில் இருந்த கீர்த்தனா திடீரென மாயமானார். அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து அவரது தாய் கிருஷ்ணம்மாள் அளித்த புகாரின் பேரில், மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் அரூர் எஸ்.பட்டியை சேர்ந்த ரமேஷ்குமார் மகள் திரிஷா(17). பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
கடந்த 19-ம் தேதி, வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்ப வில்லை. குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்க வில்லை.
இது குறித்து ரமேஷ்குமார் அளித்த புகாரின் பேரில், அரூர் போலீசார் வழக்குபதிவு செய்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.