உள்ளூர் செய்திகள்

கூட்டுறவு வார விழாவையொட்டி இலவச கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

Published On 2022-11-16 14:59 IST   |   Update On 2022-11-16 15:04:00 IST
  • கால்நடைகளுக்கு இலவசமாக தாது உப்பு கலவைகள் அளிக்கப்பட்டது.
  • நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இய்ககுனர், கூட்டுறவு சார்பதிவாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊட்டி,

69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நீலகிரி மாவட்டத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. வார விழாவின் 2-ம் நாளான நேற்று கூட்டுறவு சந்தைப்படுத்துதல், நுகர்வோர், பதனிடுதல் மற்றும் மதிப்பு கூட்டுதல் என்ற மைய கருத்தின் அடிப்படையில் மசினகுடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் மசினகுடி கிராமத்தில் சரக துணைப்பதிவாளர் மது தலைமையில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

முகாமில் ஆவின் கால்நடை மருத்துவர்கள் சிவசங்கர் மற்றும் டேவிட் மோகன் குழுவினர்கள் கால்நடைகளுக்கு பூச்சி மருந்து, குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், மலட்டுத்தன்மை நீக்குதல் போன்ற சிகிச்சைகள் கால்நடைகளுக்கு அளிக்கப்பட்டது. கால்நடைகளுக்கு இலவசமாக தாது உப்பு கலவைகள் அளிக்கப்பட்டது.

ஆவின் பொதுமேலாளர் வெங்கடாசலம், நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இய்ககுனர் அய்யனார், கூட்டுறவு சார்பதிவாளர் பிரேமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News