- வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம் மொரப்பூர் அரசு கால்நடை மருந்தகத்தில் நடைபெற்றது.
- நோய் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெறி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் இலவச வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம் மொரப்பூர் அரசு கால்நடை மருந்தகத்தில் நடைபெற்றது.
முகாமிற்கு கால்நடைத்துறை இணை இயக்குனர் டாக்டர்.சுவாமிநாதன் தலைமை வகித்து முகாமினை தொடங்கி வைத்தார்.
கால்நடைத்துறை உதவி இயக்குனர்கள் டாக்டர்.ராமகிருஷ்ணன், டாக்டர் சண்முக சுந்தரம் கால்நடை உதவி மருத்துவர்கள் டாக்டர்.காந்திராஜன்,டாக்டர் கனகசபை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை உதவி மருத்துவர் டாக்டர். வெற்றிவேல் வரவேற்று பேசினார்.
இம்முகாமில் எம்.தொப்பம்பட்டி,மொரப்பூர், தாசர அள்ளி,எலவடை ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த ஊராட்சிகளில் சுமார் 788 வளர்ப்பு நாய்கள் உள்ளன.
இவற்றிற்கு வெறி நோய் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெறி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
முகாமில் மொரப்பூர் உதவி கால்நடை மருத்துவர் மருத்துவர் டாக்டர்.வெற்றிவேல் தலைமையில் கால்நடை ஆய்வாளர் தனலட்சுமி,கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் ஆண்ட்ரூ,முருகன்,மஞ்சு ஆகிய குழுவினர் கலந்து கொண்டு வளர்ப்பு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.