உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டபோது எடுத்த படம்.

சேர்வைகாரன்பட்டி ஊராட்சியில் விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகள்

Published On 2023-01-07 09:12 GMT   |   Update On 2023-01-07 09:12 GMT
  • 120 விவசாயிகளுக்கு 240 இலவச தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
  • நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் செல்லம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கடையம்:

கடையம் வட்டாரம் சேர்வைக்காரன்பட்டி ஊராட்சியில் வேளாண்மை -உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்-அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் இலவச தென்னங்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் முதல் கட்டமாக 120 விவசாயிகளுக்கு 240 இலவச தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது. கடையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி தலைமை தாங்கினார். . யூனியன் சேர்மன் செல்லம்மாள், ஒன்றிய கவுன்சிலர் புளிகணேசன், ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை அலுவலர் அபிராமி தென்னங் கன்றுகளை நடவு செய்யும் முறை மற்றும் பராமரிப்பு முறைகள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கமாக கூறினார். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராசம்மாள், வார்டு உறுப்பினர் சந்தனரோஜா, வேளாண்மை உதவி அலுவலர்கள் கமல்ராஜன், கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி மன்ற செயலாளர் கதிரேசன் , விவசாயிகள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர் .மேலும் கடையம் வட்டாரத்தில் கலைஞர் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யபட்டுள்ள தெற்குகடையம், ரவணசமுத்திரம், வீரா சமுத்திரம், அடைச்சாணி ஊராட்சிகளிலும் முதல் கட்டமாக இலவச தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News