உள்ளூர் செய்திகள்
அம்பத்தூர் அருகே துப்பாக்கி முனையில் 4 ரவுடிகள் கைது- 2 பேர் தப்பி ஓட்டம்
- அம்பத்தூர் அருகே உள்ள சூரப்பட்டு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- ரவுடிகளிடம் இருந்து கத்தி, அரிவாள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அம்பத்தூர்:
அரக்கோணம் பகுதியில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட ரவுடி கும்பலை போலீசார் தேடி வந்தனர். அவர்கள் அம்பத்தூர் அருகே உள்ள சூரப்பட்டு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் உத்தரவின்படி அரக்கோணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் மற்றும் தனிப்படை போலீசார் அப்பகுதிக்கு விரைந்து வந்தனர். அப்போது சூரப்பட்டு பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த ரவுடிகள் 4 பேரை போலீசார் துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்தனர். அங்கிருந்து மேலும் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். ரவுடிகளிடம் இருந்து கத்தி, அரிவாள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.