உள்ளூர் செய்திகள்

விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

நெல்லிக்குப்பம் அருகே விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் நேரில் சென்று ஆறுதல்

Published On 2023-06-20 07:01 GMT   |   Update On 2023-06-20 07:01 GMT
  • நெல்லிக்குப்பம் அருகே மேல் பட்டாம் பாக்கத்தில் நடந்த கோர விபத்தில் 5 பேர் பலியாகினர்.
  • எம்.சி.சம்பத் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

கடலூர்:

நெல்லிக்குப்பம் அருகே மேல் பட்டாம் பாக்கத்தில் நடந்த கோர விபத்தில் 5 பேர் பலியாகினர். மேலும் 91 பேர் காயம் அடைந்து கடலூர் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் நேரில் சந்தித்து பழங்கள், பிஸ்கட், பிரட் ஆகியவற்றை வழங்கி ஆறுதல் கூறினர். அப்போது மாவட்ட அவைத் தலைவர் சேவல்குமார், ஒன்றிய செயலாளர் காசிநாதன், பகுதி செயலாளர்கள் கந்தன், வெங்கட்ராமன், இலக்கிய அணி ஏழுமலை, ஒன்றிய கவுன்சிலர்கள் வேல்முருகன், கிரிஜா செந்தில்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News