காரிமங்கலம் வட்டார இயக்க மேலாண்மை அலகு மையத்தில் காலை உணவு திட்ட மகளிருக்கான உணவு பாதுகாப்பு மேலாண்மை பயிற்சி நடைபெற்ற போது எடுத்த படம்.
காலை உணவு திட்ட மகளிருக்கான உணவு பாதுகாப்பு மேலாண்மை பயிற்சி
- பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தலைமை வகித்தார்.
- 146 மகளிர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி ஆலோசணை படி காரிமங்கலம் வட்டார இயக்க மேலாண்மை அலகு மையத்தில் காலை உணவு திட்ட மகளிருக்கான உணவு பாதுகாப்பு மேலாண்மை பயிற்சி நடைபெற்றது. தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா மேற்பார்வையில், வட்டார வள மைய இயக்க மேலாளர் அனுசுயா மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் முருகம்மாள், சிவகாமி முன்னிலை வகித்தனர். காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தலைமை வகித்தார்.
காரிமங்கலம் ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு தயாரித்து அளிக்கும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களில் 146 பள்ளிகளில் இருந்து தலா ஒருவர் வீதம் 146 மகளிர்களுக்கு காலை, மாலை என 2 பிரிவுகளாக உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டது. நிகழச்சியில் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் பேசும்போது:-
முதலைமைச்சரின் காலை உணவு திட்டம் உணவு தயாரிக்கும் கூடத்தில் தினந்தோறும் மாதிரி உணவு எடுத்து வைக்கவும், உணவு பொருள் பாக்கெட்டுகளில் காண வேண்டிய அம்சங்கள் குறித்தும், உணவுப் பொருள்களில் சிலவற்றில் வீட்டளவில் கலப்படம் கண்டறிதல் குறித்து உணவுப் பொருட்கள் கொண்டு நேரடி செயல் விளக்கமுடன், காலாவதி தன்மை கவனித்து உபயோகிக்கவும், பயிற்சியில் தெரிவித்த நடைமுறைகள் வழிமுறைகள் முறையாக பின்பற்ற படுதலுடன் பதிவேடுகளும் பராமரிக்கபட வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.