உள்ளூர் செய்திகள்

கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.

வள்ளலாரின் 200-வது பிறந்த நாள் விழாவினையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம்

Published On 2022-12-30 15:40 IST   |   Update On 2022-12-30 15:40:00 IST
  • பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.
  • வள்ள லார்கள், அடிகளார்கள், ஆன்மீக பக்தர்கள், பொது மக்கள் கலந்துகொண்டனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அடுத்த கண்ணம்பள்ளி வெங்கட்ரமண சுவாமி கோவில் சார்பில், கிருஷ்ணகிரி எஸ்எஸ் திருமண மண்டபத்தில் வள்ளலாரின் 200-வது பிறந்த நாளையொட்டி கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு பர்கூர் எம்எல்ஏ., மதியழகன் முன்னிலை வகித்தார். துணை ஆணையர் குமரேசன் வரவேற்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சி குறித்து கலெக்டர் கூறுகையில்:-

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சீர்மிகு நல்லாட்சியில் வள்ளல் பெருமானாரின் 200-வது பிறந்த நாளையொட்டி 2022 அக்டோபர் மாதம் முதல் 2023-ம் அண்டு வரை 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் முப்பெரும் விழா எடுக்கப்படும் எனவும், தர்மச்சாலையை துவக்கி வைத்து, பசித்த ஏழைகளுக்கு உணவு வழங்கிய வள்ளலாரின் பெருமையை போற்றும் விதமாக கோவில்களில் ஆண்டு முழுவதும் அன்ன தானம் வழங்கப்படும் என சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் அறிவித்தார்.

அதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி கண்ண ம்பள்ளி வெங்கட்ரமண சுவாமி கோவில் சார்பாக தற்போது அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இன்றும் தொடர்ச்சியாக நண்பகல் 12 மணி அளவில் கிருஷ்ணகிரி எஸ்எஸ் திருமண மண்டபத்தில் 200 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக வள்ளலார், ஒரே இரவில் எழுதிய அகவல் வழிபாடு வள்ளலார் ஆன்மீக அன்பர்களால் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் பரிதாநவாப், பிடிஏ தலைவர் நவாப், நகர்மன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், பாலாஜி, வேலுமணி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் அஸ்லம், செயல் அலுவலர் சித்ரா, ஆய்வாளர் ராமமூர்த்தி, தனி தசில்தார் ரமேஷ், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், வள்ள லார்கள், அடிகளார்கள், ஆன்மீக பக்தர்கள், பொது மக்கள் கலந்துகொண்டனர். 

Tags:    

Similar News