உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

நிலக்கோட்டை சந்தையில் வரத்து குறைவால் பூக்கள் விலை கிடு கிடு உயர்வு கனகாம்பரம் கிலோ ரூ.1500

Published On 2022-10-22 07:09 GMT   |   Update On 2022-10-22 07:09 GMT
  • கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பெய்த தொடர்மழை காரணமாக பூக்கள் செடியிலேயே அழுகி விழுந்தது. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டது.
  • பெரும்பாலான பூக்கள் விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இருந்தபோதும் வரத்து குறைந்ததால் பல ஊர்களுக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது.

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட் மிகவும் பிரசித்திபெற்றது. மதுரை மல்லி எனப்படும் மல்லிகை இங்கிருந்தே அனுப்பி வைக்கப்படும். நிலக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் விளையும் பூக்கள் இங்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு பல்வேறு ஊர்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பெய்த தொடர்மழை காரணமாக பூக்கள் செடியிலேயே அழுகி விழுந்தது. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டது.

இருந்தபோதும் தீபாவளி பண்டிகை சமயங்களில் மணக்கும் பூக்கள் தேவை அதிகரிக்கும் என்பதால் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். விலை எதிர்பார்த்ததை விட கூடுதலாக கிடைத்தது.

மல்லிகை ரூ.1000, கனகாம்பரம் ரூ.1500, முல்லை ரூ.1100, காக்கரட்டான் ரூ.1100, கலர்பிச்சி ரூ.500, வெள்ளை பிச்சி ரூ.600 என்ற விலையில் விற்பனையானது. பெரும்பாலான பூக்கள் விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இருந்தபோதும் வரத்து குறைந்ததால் பல ஊர்களுக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது.

Tags:    

Similar News